பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை பொருள் விளக்கம்: மனை - வீட்டிற்கு (அங்கு வந்து வாழ்வதற்கு) தக்க தகுந்தாற்போல், தான் பயன்படத் தக்கவாறு உதவி வாழ மாண்புடையள் = மன அழகு மிக்கவளாக (சுயநலமற்றவளாக) ஆகி = தன்னை நிறைபடுத்திக் கொண்டு தற்கொண்டான் = தன்னை (துணை) ஏற்றுக் கொள்கிறவன் வளம் = வலிமை, அழகு, செல்வம், தகுதிக்கு ஏற்ப தக்காள் - தன்னைத் தகுந்தவளாக உயர்த்திக் கொண்டு வாழ்க்கை = வெற்றிகரமாக வாழும் பாங்கில் துணை = உதவி செய்பவளாக விளங்க வேண்டும். சொல் விளக்கம்: கண் = உடம்பு, ஆக்கம் (ஆன்மா) மாட்சி - அழகு, பெருமை, வளம் முற்கால உரை: இல்லறத்திற்குத் தகுந்த நற் குண நற்செய்கையோடு தன் கணவன் வரவுக்குத் தக்க செலவு செய்பவள், இல்வாழ்க்கைக்குத் துணையாவாள். தற்கால உரை: கணவனின் வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்து வாழ்க்கையை நடத்துபவளே, நல்ல வாழ்க்கைத்துணைவி ஆவாள். புதிய உரை: ஆற்றல் மிகு அறனுக்கு ஏற்றாற் போல, மனஅழகு மிக்கவளாக, உடல் வலிமை, உடலழகு மிக்கவளாகத், தன்னைத் தகுதியுடையவளாக உயர்த்திக் கொண்டு, அவனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவி செய்பவளாகவும் அவள் விளங்க வேண்டும். விளக்கம்: அனைவரும் போற்றுகிற மனிதன் அறன். அவனுக்கு உதவி செய்யும் நல் துணையாக வாழ வருகிற ஒரு பெண் அந்தக் குடும் பத்தில் வாழ்கிற சிறப்பிற்கு மனத்தால் (தன்னை மாற்றிக்கொண்டு) தயாரான மாண்புடன் வரவேண்டும். அதன்பிறகு