பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . பாமரரும் புரிந்து கொள்வதற்காகப் பழகு தமிழில் விளக்கம் எழுதியுள்ளார். தம் உரையுள் குணம் நாடவும் குற்றம் காணவும் வேண்டுகிறார். 'கற்றதன் பயன் நிகழ்காலத்தில் சந்தித்து வாழ்தல் எதிர்காலத்தில் சிந்தித்து வாழ்தல்; இறந்த காலத்திதை வந்தித்து வாழ்தல்" (ப.18) என்று கூறுகிறார்! அதிகாரம் தோறும் முதலில் விரிவான விளக்கம் வழங்குகிறார். 'வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து வைத்திருக்கும் அதிகாரம் மக்கட் பேறு. அறத்தில் சிறந்தவன் அறன்; அறத்தில் சிறந்தவள் அறனி. அறனும் அறனியும் இணைந்து நடத்துகிற இல்வாழ்க்கையின், ஈடில்லாப் பரிசு குழந்தைச் செல்வம்'. (ப.97) அதிகாரங்களை இயைபு படுத்திக் கூறுவது இவ்வுரையின் சிறப்பாகும். 'உடலால் காட்டுகின்ற அன்பு கலைந்து விடும், உள்ளத்தால் மீட்டுகின்ற அன்பு சலித்துவிடும். உயிரோட்டமாக இருக்கின்ற அன்பே நிலைத்து நிற்கும்' என்று அன்புடைமை அதிகாரத்தில் வள்ளுவர் விளக்கினார். அன்பு யாரிடம் எப்படிக் காட்ட வேண்டும்? குடும்பத்தாரிடம் காட்டுகின்ற அன்பு பாசம். சுற்றத்தாரிடம் காட்டுகின்ற அன்பு பரிவு. புதியவர்களிடம் காட்டுகின்ற அன்பு மனித நேயமாகும். இத்தகைய இனிய மனித நேயமானது இல்வாழ்வோர்க்கு என்றும் தேவை என்பதால் தான், அன்புடைமைக்கு அடுத்ததாக விருந்தோம்பலை வள்ளுவர் வைத்திருக்கிறார்." (ப.122), பரிமேலழகர் போன்று விளக்கம் தர முயல்வது குறிப்பிடத்தக்கதாகும், பாராட்டுக்குரியதாகும். ஒழுக்கம் பண்பாற்றலைத் தருகிறது என விளம்பும்போது, 'ஒழுக்கம் தான் வழிகாட்டி; வாழ்க்கைக்கு முனைப் பூட்டி: சிறப்புக்குச் செயல்காட்டி' என்று தெரிவித்து, ஒழுக்கம் ஒருவரை உயர்த்துவதைச் சுட்டிக் காட்டுகிறார் (ப.185). 'நலக்குரியார்' என்ற சொல்லுக்கு விரிவுரை தருவது வியப்பூட்டுகிறது. "பிற பெண்ணை நயக்கும்போதே, அக அழகு, முக அழகு, நினைவழகு, செயல் அழகு, புகழ் அழகு எல்லாமே பாழாகிப் போகிறது" (ப.204) திருவள்ளுவர் பயன்படுத்தாத ஒரெழுத்து ஒள. எதுகை கருதி ஒளவியம் அவ்வியம் என வருகிறது. அக்குறளுக்குப் பேராசிரியர் நவராஜ் தரும் விளக்கம் பாராட்டத் தக்கது. 'பொறாமை கொண்டவன் பெருக்கமும் நேர்மையாளன் இறக்கமும் நீடித்து