பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

திருக்குறள் புதைபொருள்

கூறுவதன் முன்னும், உழவைப்பற்றிக் கூறியிருப்பது தயமுடையதாகக் காணப்படுகிறது.

உழவுத்தொழில் சிறப்புடையது! உலகம் உழவர் பின்னே செல்லக்கூடியது! உழுவார் உலகுக்கு அச்சாணி! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! உழவர் கைமடங்கின் உலகில் வாழ்வில்லை என்றெல்லாம் கூறியபின், இறுதியாகக் கூறிய குறள் இது.

உழவுத் தொழில் சிறந்திருந்தும், அதனைச் செய்யாது சோம்பித் திரியும் மக்களின் இழிநிலையை இக்குறள் அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறது.

எம்மிடம் எப்பொருளுமில்லை என்று கூறிச் சோம்பலும் வறுமையும் கொண்டு வாடியிருக்கும் மக்களைக் கண்டு நிலம் நகைக்கும் என்பது இதன் பொருள்.

எமக்கு எத்தொழிலுமில்லையே என்று ஏங்கித் திரியும் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களைக் கண்டும் நிலம் நகும் என்பதும் இருக்குறளின் கருத்தாகும்.

இப் பரந்த உலகில் நிலங்கள் பலவிருந்தும், அதனைத் திருத்தி உழுது, விளைத்து உண்டு வாழாது, வீணாக வறுமையால் வாடி வருந்தி வாழ்கின்ற மக்களைக் கண்டால் நிலம் நகைக்கும் என்று இக்குறள் கொட்டி முழக்குகிறது.

வள்ளுவர் வாழ்ந்த அக்காலத்தில் எவரும் சோம்பி இருந்ததில்லை என்ற வரலாறு ஒன்றைக் ‘காணின்’ என்ற ஒரு சொல் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

‘இலன்’ என்று ஒருமையிற் கூறாமல், ‘இலம்’ என்று பன்மையிற் கூறியிருப்பதிலிருந்து, எங்கேனும் ஓரிருவர் காணப்பட்டாலும், சோம்பேறிகளைப் பெருந் தொகையினராகக் காணமுடியாது என்ற கருத்தும் இதில் வலியுறுத் தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

‘நகும்’ என்ற சொல்வினைக்கொண்டு அதை மகிழ்ச்சிச் சிரிப்பு எனக் கொள்வதற்கில்லை. அது ஒரு ஏளனச் சிரிப்பு