பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

5. கள் ளாமை

கள்ளாமையாவது யாதொரு பொருளையுங் களவாற்கொள் ளாராதல். மேல் இன்பங்காரணமாக மறைந்தொழுகாமை கூறினார் ; இது பொருள் காரணமாக மறைந்தெ ழுகலா கலின் அதன் பிற் கூறப்பட்டது. இது முதலாகக் கொல்லாமையிறாகக் கூறுகின்ற அறங்களெல்லாம் இல்லறத்தினின்றார்க்கு முரிய வாகக் கொள்ளப் படும்.

281. எள்ளாமை வேண்டுவா னென்யா னெனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

(இ-ள்) பிறரா லிகழாமையை வேண்டுமவ னிவனென்று சொல்லப்படுமவன், யாதொரு பொருளையுங் களவிற்கொள்ளாமல் தன்னெஞ்சைக் கா க்கா, எ-று).

இது, களவு ஆகாதென்றது. 1

28.2. உள்ளத்தா லுள்ள லுத் தீதே பிறன்பொருளைக்

கள் ளத்தா ற் கள் வே மெனல்.

(இ-ஸ்) பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால், அதனை மறைவினாலே கள் வேமென்று முயலாதொழிக, (எ-று)

இது, களவு தீதென்றது. 2

283. கள் வார்க்குத் தள்ளு முயிர் நிலை கள்ளார்க்குத்

தள்ள து புத்தே கருலகு.

(இ-ஸ்) பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும், கள்ள தார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது (எ-று).

தள்ளுமென்றது ‘தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்றாற் போல. இது, கள்வார் முத்தி பெறுதலுமிலர்; கள்ளாதார் சுவர்க்கம் பெறா மையுமில ரென்றது. 3

குறள் 595.