பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 |

7. வெகுளாமை

303, இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

(இ=ள்) தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்ற ற் பால, ஒருவன் தனக்கு இன்ாைதவற்றைப் பல காற் செய்யி னும் கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று, (எ-று).

மேல்வலியவன் பொறுக்கவேண்டுமென்றார்; அவன் பொறுக் குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றது. J.

304. செல்லா விடத்துச் சினந் தீது செல்லிடத்து

மில்ல தனிற் றிய பிற.

(இ-ள்) இயலாவிடத்துச் சினத்தல்தீது; இயலுமிடத்தும் அதனிற்றிதாயிருப்பன பிறவில்லை, (எ-று).

இது இயலாதவிடத்து இம்மையிலே தீதாயினும், இயலுமிடத்து மறுமையிலே தீதாமாதலான் எவ்விடத்தினும் த வி ர வேண்டு மென்றது. 4

805. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்

றன்னையே கொல்லுஞ் சினம்.

(இ-ள்) ஒருவன் தன்னைத்தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோற்றாமற் காக்க; காவானாயின் அச்சினம் தன்னையே கொல்லும், (எ-று)

இஃது உயிர்க்கேடு வருமென்றது.

306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு

மேமப் புணையைச் சுடும்.

(இ-ள்) சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்புத் துன்பக் கடலுளழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு; இது காரணக் குறி. இது சினம்) தன்னையடுத்தாரைக் கொல்லுமென்றது. 6