பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

7. வெகுளாமை

307. சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தெறிந்தான் கையிழையா தற்று.

(இ-ள்) சினத்கை பொருளாகக் கொண்டவன் கெடுதல் கி. க்தெறிந்தவன் கை தப்பாமற் பட்டது போலும். (எ-று).

இது பொருட்கேடு வருமென்றது. T

308. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்

பகையு முளவோ பிற.

(இ-ள்) நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போலப் பகையாயிருப்பன வேறும் சிலவுளவோ? (எ-று)

இஃது இன்பக்கேடு வருமேன்றது. இவையைந்தும் வெகுட் சியால் வரும் குற்றம் கூறிற்றின. 8

309. உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா

லுள்ளான் வெகுளி யெனின்.

(இ-ள்) தன்னெஞ்சினால் வெகுளியை தினையானாயின் தானினைந் தனவெல்லாம் ஒரு காலத்தே கூடப்பெறுவன். (எ-று).

இது, நினைத்தன பெறுமென்றது. 9

3 10. இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

(இ-ள்) சினத்தை மிகுத்தார் இறந்தாரோடு ஒப்பர்; அதனை யொழிந்தார் எல்லாப்பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், (ா-று).

இது, வெகுளாதார் பெரியரென்றது. 10