பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

9 கொல்லா மை

கொல்லாமையாவது

யாதோருயிரைக் கொல்லாமை. இது வெக,பசி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப் பட்டது. இவை மூன்றதிகாரத்தானும் வெகுளிப்பகுதி கூறிற்றின.

521. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை.

(இ-ள்) தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக; தான் பிறி தொன்றினுடைய இனிய வுயிாை விடுக்குந் தொழிலினை (எ-று).

தன் உயிர் நீப்பினும் என்றது, உயிர்க்குக் கேடுவருங்காலத்து நோய் மருந்தாக்கக் கொல்லுதல் குற்றமன்று என்பாரைப்பற்றி, இது கொல்லா தொழி.க என்றது. 1

322. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்

கொல்லாமை சூழு நெறி.

(இ-ஸ்) நல் வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதோருயிரையுங் கொல்லாமையைச் சித்திக்கும் வழி. (எ-று)

இது நன்னெறியாவதும் கொல்லாமை யென்றது. 2

323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

(இ-ள்) இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே

யணையப் பொய்யாமையும் நன்று எனலாம் (எ-று).

இதனாற் சொல்லியது எல்லா அறத்தினும் பொய்யாமை நன்று; அதினும் நன்று கொல்லாமை யென்றவறாயிற்று. 3.

32.4. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்

பிறவினை யெல்லாந் தரும்.

(இ-ள்) நல்ல வினை யாதெனின், கொல்லா தொழிதல்; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுத் தருமாதலான் (எ-று).