பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

11. துறவு

84.3. தலைப்பட்டாச் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

( இ- ள்) பற்றறத் துறந்தார் மூத்தியைத் தலைப்பட்டார்; அ. ல கார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார், (எ-று)

இது மறுமைப் பயன் கூறிற்று. இவை யிரண்டினானும் புறத் துறவின் பயன் கூறப்பட்டது. 8

349. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்.

(இ-ள்) யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக் கத் கினை யறுக்குமவன், தேவ க்கு மேலாகிய உலகின் கண்ணே செல்லும், (எ-று).

இஃது அகத்துறவும் அதனாற் பயனும் கூறிற்று

350. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

(இ-ள்) பற்றறுத்தான் பற்றினவதனைப் பற்றுக; அதனைட் பற்றுங்கால், பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்கூறப்பட்டது. 10

12. மெய்யுணர்தல்.

மெய்யுணர் தலாவது எக்காலத்தினும் எவ்விடத்தும் அழியாது நிற்கும் பொருள் இதுவென வுணர்தல், இது பற்றறத் துறந்தோரது உள்ள நிகழ்ச்சியாதலான், அதன் பின் கூறப்பட்டது.