பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

10. வலியறிதல்

4 73. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்

தனக்கியலும் திறம் இதுவென அறிக; அறிந்தபின் அவ் வளவிலே நின்று ஒழுகுவனாயின் அவனுக்கியலாததில்லை. 3

இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.

474. அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

(இ-ள்) அமைவுடையனாயொழுகுதலும் இன்றித், தன்வலி யளவும் அறியாதே, தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன், ( எ-று)

மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது. 4.

475. நூனிக்கொம்ப ரேறினா ர..திறந் தரக்கி

னுயிர்க்கிற தி யாகி விடும்.

(இ-ள்) ஒரு மரத்தின் நுனிக்கொம்பி லேறியவன் தன்னள வறிந்து வைத்துப் பின்னும் மேலே செல்வனாயின், அது தன் னுயிர்க்கு இறுதியாகிவிடும், (எ-று).

இஃது அரசன் தன்னாற் செல்லலாமளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல். 5

476 பீலிபெய்சாகாடு மச் சிறு மப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

(இ-ள்) பிலியையடைந்த சகடமும் அச்சுமுறியும்; அப்பீலி யை மிகவும் நெருங்க இடின், (எ-று).

அரண் வலிது என்றார்க்குப் படைமிகின் அரண் நில்லா தென்றற்குக் கூறிற்று எனவே பகைவர் மேலே நெருங்கிச் செல்லினும் அளவறியாது செல்லின் கெடும் இடனுமுண்டாம். என்றது, G