பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

12. இடனறிதல்

(இ-ள்) கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது; கட லின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஒடாது, (எ-று).

இஃது, இடத்திற்காங் கருவி பண்ண வேண்டுமென்றது. 9

500. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

(இ-ள்) தன்னைக் கெடுத்தற் கெண்ணினவர், தங்களெண் ண ம் இழப்பர்கள்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின், (எ-று).

இஃது, இடமறிந்தாலும் செய்வோர் அமைதியும் வேண்டு மென்றது. இனி அமாத்தியர் இலக்கணம் கூறுகின்றாராதலின் இது பிற் கூறப்பட்டது. 10

13. தெரிந்து தெளிதல்

தெரிந்து தெளிதலாவது அமாத்தியரை ஆராய்ந்து தெளிதல், காரியந்தப்பாமலெண் னி, அதற்காங் காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரையும் எண்ணிக் கொள்ள வேண்டு தலின், அவற்றின் பின் கூறப்பட்டது.

501 அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா

லின்மை பரிதே வெளிறு.

(இ-ள்) கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார் மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை, (எ-று).

கல்வியுடையார் உள்ளும் புறம்பும் துாயாரைத் தேறலாம் என் பது துரோணாசாரியார் மதம். அவ்வளவில் தேறலாகா தென்று இது கூறப்பட்டது. 1