பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

23. மடியின்மை

(இ-ள்) நெஞ்சத்து மடியினாலே வினையின் கண் மடி த்தலைச் செய்து, ஒழுகா நின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும், (எ-று).

மடியுடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது. 2

603. குடி யென்னுங் குன்றா விளக்க மடி யென்னு

மாசூர மாய்ந்து விடும்

(இ-ள்) குடியென்னா நின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது, (எ-று).

இது மு ன் பே தோற்றமுடைத்தாகிய கு டி யு ங் .ெ க டு மென்றது. 3

6.04. குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து

மாண்ட வுகுற்றி லவர்க்கு.

(இ-ள்) குடி யுங் கெட்டுக்குற்றமும் மிகும்; மடியின் கண்ணே ஒன்றி மாட்சிமைப்பட்ட முயற்சியில்லாதார்க்கு, (எ-று).

இது, குடி கெடுதலேயன்றிக் குற்ற முண்டா மென்றது. 4

605. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட வுளுற்றி லவர்.

(இ-ள்) நட்டோரால் க முறுதலையும் பெற்று ஏதிலார் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லையும் கேட்பர் , மடியைவிரும்பிச் செய்து மாட்சி மைப்பட்ட முயற்சி யில்லாதார், (எ-று).

இது பிறரால் இகழப்படுவரென்றது. -5

6.06. ம: மை குடி மைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்

கடி மை புகுத்தி விடும்.

1 , கெடும்’ என்பது மணக். பாடம்.