பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

23. மடியின்மை

( இ-ள்) குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின், அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். (எ-று).

இது, கீழ்ப்படுத்தலேயன்றி அடி மையும் ஆக்குமென்றது. 6

807 படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்

மாண் பய னெய்த லரிது.

(இ-ள்) நில வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத் தும் மடியுடையராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல்

இல்லை, (எ-று).

இது, செல்வமுண்டாயினும் கெடுமென்றது. 7

6.08. நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்

கெடுநீரார் காமக் கலன்.

(இ~ள்) விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந் தன்மையார் காதலித்தேறும் மரக்கலம் (எ-று).

தம்மைக்காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போறலின கலமெனப்பட்டது. துயிலும் மறவியும் நெடுநீர்மையும் மடியினோடு ஒத்த இயல்பின ஆகலான் இவையும் ஒரு வாற்றால் கூற வேண்டுதலின் ஈண்டுக் கூறப்பட்டது. இத்துணையும் மடி யினால் வருங் குற்றங் கூறிற்று. 8

609. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

(இ-ள்) குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்ற மானது ஒருவன் மடியை ஆளுதலுடைமையைக் கெடுக்கக்கெடும் (எ-று).

குற்றம் என்பது குடிக்குவேண்டுவன செய்யாமை வருங் குற்றம்.