பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

25. இடுக்கணழியாமை

தெளிவு-துணிவு இது, பொருட்கேட்டினால் வருந் துன்பத் திற்கு அழியாதாரைக் கூறிற்று. 8

529. இன்பத்து எளின்பம் விழையாதான் றுன் பத்துட்

டுன்ப முறுத லிலன்.

(இ-ள்) இன்பம் நுகருமிடத்து அதனை விரும்பாதவன், அத னால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன் (எ-று).

இன்பம் நுகருமிடத்து அதனை விரும்பாமையாவது அவ் விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது, காமத்தால் வருந்துன் பத்திற்கு அழியாதா ரைக் கூறிற்று. 9

630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்

னொன்னார் விழையுஞ் சிறப்பு.

(இ-ள்) இன்னாமையை இன்பம்போலக் கொள்வனாயின், அது பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம், (எ-று).

மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தை இன்பம் போல கொள்வனாயின், பகைவரும் மதிப்பரென்றது. 10

அரசியல் முடிந்தது.