பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

3. வினைத்துய்மை

654. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்

மற்றன்ன செய்யாமை நன்று.

(இ-ள்) துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினை யைச் செய்யா தொழிக; வினை செய்வானாகில், அது போல் வன வுஞ் செய்யாமையே நல்லது, (எ-று).

இது, பின்னிரங்கப்படும் வினை செய்யலாகா தென்றது. 4

655. ஈன்றாள் பசிகரண்பா னாயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

(இ-ள்) தன்னைப் பயந்தாள் பசி கண்டானாயினும், சான் றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யா தொழிக, (எ-று).

இது, நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது. 5

65.6. இடுக்கண் வரினு மிளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

(இ-ள்) துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய் யார், துளக்கமற்ற தெளிவுடையார், (எ-று).

அவர் வருமது வரும் என்று நினைப்பர். இது, பிறரால் இகழப் படுவன செய்யற்க வென்றவாறாயிற்று. இத்துணையும் கடிய வேண்டுவன கூறப்பட்டது. 6

5ே7. கடிந்த கடிந்தொரார் செய்வார்க் கவைதா

முடிந்தாலும் பீழை தரும்.

(இ-ள்) நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு, அவ்வினை தான் கருதினவாற்றான் முடிந்த பின்பு பீடையைத் தரும், (எ-று).

உம்மையால் முடிவதன் முன்னும் பீடைதரும் என்றது. இது, நன்மையல்லாத வினை செயின், அதுவும் தீமை தருமென்றது. அவை பின்பே காட்டப்படும் என்றார். 7