பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

4. வினைத்திட்பம்

(இ-ள்) தாம் எண்ணிய கருமங்களை எண்ணியபடியே பெறு வர்; அவ்வாறு எண்ணியவர் அவ்வினையைச் செய்து முடிக்குத் திண்மையுடையாராகப் பெறுவாராயின், (எ-று).

இது, வினையின் கண் திண்மை வேண்டுமென்றது. 1

662. எனைத் திட்ப மெய் தியக் கண்னுைம் வினைத் திட்பம்

வேண்டாரை வேண்டா து லகு.

(இ-ள்) கருவி முதலாயின வெல்லாவாற்றானும் திண்மை பெற்றவிடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாாை உலகத் தாள் விரும்பார், (எ-று).

பல பொருளும் மிகுதியுடையார்க்கு வினைத்திட்ப மின்றா னால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு, இது கூறப்பட்டது. 2

663. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப

மற்றைய வெல்லாம் பிற.

(இ-ள்) வினைத் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவன் மனத்தின் உண்டான திண்மை; அதனையொழிய மற்றையவெல் லாம் திண்மையென்று சொல்லப்படா. (எ-று).

மற்றைய வென்பது கருவியும் உபாயமுடித்தலும். வினைத்திட் பம் யாதென்றார்க்கு இது கூறப்பட்டது. 3.

664. * ஊறொரா ருற்றபி னொல்காமை யில்விரண்டி

னாறென்ப ராய்ந்தவர் கோள்.

  • -*.

-

1. மற்றவை’ என்பது மணக். பாடம்.

  • (பரிமேலழகர் கூறும் பாட பேதம் ஊறொரார்’ என் பது. இப்பாடம் மணக்குடவர் பரிப்பெருமாள் கொண் டனவே யாதல் உரையான் அறியப்பெறும் ஆகவே ‘ஊரொறாவ்” என்றபாடம் ஊறொரார்” எ ன் று இங்குத் திருத்தப் பெற்றது. பின்னும் ஊறு,ஓராது என்

றமை காண்க.)