பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

3. பொருளியல்-1. நாடு

(இ-ள்) குடிமை செய்தல் பல காலத்திலே ப்ல வரினும் அதனை ப், பொறுத்து நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு

கொடுக்கவல்லது நாடு, (எ-று).

தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. குடிமையாவது

கடமையொழிய வருமவை. இதனானே குடிமக்கள் பண்புடையராக வேண்டும் என்பது கூறிற்று. 9

? 40. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.

(இ-ள்) மேற்கூறியவாற்றான் எல்லாம் நேர்ந்ததாயினும், பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு, (எ-று).

இது, நாட்டிற்கு அரசனும் பண்புடை யனாக வேண்டு மென்றது. 10

2. அரண்

அரணானது அரணிலக்கணங் கூறுதல், மேல் நாட்டிலக்கணங் கூறினார் நகர் இலக்கணங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப் பட்டது.

741 ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.

( இ-ள்) வலியாற்றுவார்க்கும் அரண் பொருளாம்; வலியின் மையான் அஞ்சித் தம்மைக் காப்பார்க்கும் அரண் பொருள்; ஆத லால், அதனைச் செய்யவேண்டும், (எ-று).