பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

2 நட்பாராய்தல்

( இ- ள்) ஒருவனுடைய குனமும் குடிப்பிறப்பும் குற்றமும் கறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பா கப்பிணிக்க, (எ-று).

இவையெல்லாம் ஒத்தனவாயின், உறவு நாள் செல்லும். இஃது ஆராய வேண்டுவன கூறிற்று. 2

793. குடி ப் பிறந்து தன்கட் பழிதானு வானைக்

கொடுத்துங் கொளல் வேண்டு நட்பு.

(இ-ஸ்) மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து, (தன் பாட்டுப்) பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை, அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்க, (எ-று).

கொடுத்தும் கொளல் வேண்டுமென்றமையால் அரசன் தட்பா வாசைக் கூறிற்று. 3

79.4. அழச்சொல்லி யல்ல தி டி த்து வழக்கறிய

வல்லார் தட் பாய்ந்து கொளல்.

(இ-ஸ்) குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியல் லாதன வற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்துகெ ள்க, (எ-று).

இது மந்திரிகளின் நட்பாவாரைக் கூறிற்று. அரசர் அல்லா தார்க்குத்தம்மில் உயர்ந்தாரை நட்பாக வேண்டும் என்று கொள்ளப் படும். 4.

795. மருவுக மாசற்றார் கேண்மையொன் றித்து

மொருவுக வொப்பிலார் நட்பு.

(இ-ள்) குற்றமற்ற ர் நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும், தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக (எ- று) .

இது குற்றமற்றார் நட்பைக் கொள்ள வேண்டும் என்பது உம் நிகர் அல்லாதார் நட்புத் தவிர வேண்டும் என்பது உம் கூறிற்று. 5