பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 50

4. தீ நட்பு

818. உறினட் டறினொருஉ மொப்பிலார் கேண்மை

பெறினு மிழப்பினு மென்.

(இ-ன்) செல்வம் மிக்க காலத்து நட்டு, அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றவதனால் வரும் நன்மை யாது? இழந்தவதனால் வரும் தீமை யாது? (எ-று).

மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான், ஒப்பிலாதார் என்றார். அன்றியும் தன்னோடு பொருத்தமில்லாதார் என்றுமாம். இது காலபுருடர் நட்புத் தீதென்றது 8

8 19. உறுவது சீர்துக்கு நட்பும் பெறுவது

கொள் வாருங் கள்வரு நேர். (இ=ள்) நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை பொக்கப் பார்த்துக் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்மைதுக்கும் தட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வரும் மேற கூறியவர்களோடு ஒப்பர், (எ-று)

இம்மூவர் நட்பையும் ஆ ராயின் அவர்களும் தீமை தருவர் என்றது. 9

820. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்

பத்தடுத்த கோடி யுறும். (இ~ள்) நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக் கோடி மடங்கு நன்மை மிகும், (எ-று).

நகைவகையார் நட்பு ஆகிய அதனினும் பகைவராதல் நன்மைபயக்கும் என்று பொருள் உரைக்கினும் அமையும் நகை வகையர்-காமுகர் வேழம்பர் முதலாயினார். இவர்கள் நட்புத் தீதென்றது. பின் கூடாத நட்புக்கூறுவார் ஆதலின் இவர்களும் அதற்குரியர் என்பதற்கு ஈண் டுரைத்ததென்க. * {}