பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

2. புல்லறிவாண்மை

புல்லறிவாண்மையாவது சிற்றறிவின் இயல்பும் அதனால் வருங் குற்றமும் கூறுதல். இதுவும் பேதைமையோ டொத்த இயல் பிற்றாதல ன் அதன் பின் கூறப்பட்டது.

84. 1. வெண்மை யெனப்படுவ தியாதெனி'னொண்மை

யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

( இ-ள்) புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மை தாம் மதிக்குங்களிப்பு ( எ-று) .

வெண்மை-காழ்ப்பின்மை; முற்றுதலின்மையின் வெண்மை யெனப்பட்டது. புல்லறிவாவது இத்தன்மைத்து என்று கூறுவார் முற்பட அறிவு இல்லாதவன் அறியேன் என்னாது அறிவுடை யோனாகத் தன்னை மதித்தல் புல்லறிவென்றது. 1.

842. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதுஉ மையத் தரும்.

(இ-ள்) தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றானா ஏறட்டுக் கொள்ளுதல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். (எ-று) .

இது, கல்லாததனை மேற் கொள்ளுதல் புல்லறிவென்றது. 2

843. உலகத்தா ருண்டென் தில்லென் பான் வையத்

த லகையா வைக்கப் படும் ,

(இ-ன்) உலகத்து அறிவுடை யார் பலரும் உண்டென்பது ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன். இவ்வுலகின் கண்ணே ஒரு பேயென்று எண்ணப்படும் (எ-று).

இஃது, உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறி வென்றது.