பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

10. கள்ளுண்ணாமை

து ரு வு. த ல்-திசைச்சொல். இது, பிறர்சொல்லவும் கேளா .ொன்றது. இத்துணையும் கள் உண்பாற்குளதாகும் குற்றம் கூறப் பட்டது. 7

928. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்த தர உ மாங்கே மிகும்.

(இ-ஸ்) கள்ளுண்டால் களித்தறி யே ணென்பதனைக் கைவிடுக; மனத்தின் கண் கரந்தது உம் அப்பொழுதே வாய்சோர்ந்து புலப்

படும்; அது கள்ளுக்கு இயல்பு, (எ-று) .

இது மயங்கே .ொன்பார்க்குக் கூறப்பட்டது. 8

929. உள்ளொற்றி யுள்ளுர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்

கள்ளொ ற்றிக் கண் சாய் பவர்.

(இ-ள்) தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்து உள்ளு ராலே இகழப்படுபவர்; எல்லா நாளும் கள்ளுள்ளவிடத்தை தாடி

அதன் கண்ணே வாழுமவர். (எ-று).

உண்ணுமது அறிவாரில்லை என்பார்க்கு இது கூறப்பட்டது. 9

930. கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

(இ-ள்) பயன் அறியாமை யுடைத்து; பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் .ெ ச ய் யு ம் கள்ளினைக்

கோடல் , (எ-று).

மெய் என்பது தாம் என்பதும், ஒன்று என்பதும் அறத்துப் பாலில் கூறப்பட்டது. அன்றியும் பொருளில் உண்மை யறியாமை என்றுமாம். இது. மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை அறிவுடையார் செய்யாரென்பது கருத்து. I Q