பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

4. சான்றாண்மை

98.2. கொல்லா நலத்தது நோன் மை பிறர் தீமை

சொல்லா நலத்தது சால்பு.

(இ-ள்) தவத்திற்கு உறுப்பான சீலங்கள் பல உளவாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம்; அதுபோலச் சான்றாண் மைக் குணங்கள் பல வாயினும், பிறரது பழியைச் சொல்லாத நலத்தை யுடையது சால்பு, (எ-று).

மேற்கூறிய சால்பிற்கு இலக்கணம் கூறுவார், முற்படப்புறஞ் சொல்லாமை எல்லாக் குணத்தினும் இன்றிமையாதாக வேண்டும் என்று கூறினார். 2

983. அன்பு நா னொப்ரரை கண்ணோட்டம் வாய்மையொ

1ை -த்து சால் ,ன்றிய துரண்.

(இ-ள்) அன்புடைமையும் பழிநாணுதலும் ஒப்புரவுடைமை யும் கண்ணோட்டமும் மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் துண் , எ-று).

இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது. 3 984. குணநலஞ் சான்றோர் நலனே பிற நல

மெந்நலத் துள்ளதுரஉ மன்று.

(இ-ள்) சான்றோர்க்கு நலமாவது குண நல்லராகுதல்; அக் குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நல மன்று, (எ-று).

இது, குணநலம் சால்பிற்கு அழகென்றது. 4

985. ஆற்றுவா ராற்றல் பணித லது சான்றோர்

மாற்றாரை மாற்றும் படை. (இ-ள்) பெரியாரது பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந் தொழுகுதல்; அதுவே சான்றவர் மாறுபட்டவரை வெல்லும் கருவி,

எ-று) .

இது சான்றவர்க்கு வலியாவது தாழ்ந்தொழுகுதல் என்ற வாறு. 5