பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

2. இல்லறவியல்-1. இல்வாழ்க்கை.

41. இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு

நல்லாற்றி னின்ற துணை.

(இன்) இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய வாக்கும் நல்லவழியின்கண்ணே நின்றதொருதுணை, (எ.று).

என்றது, தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின் பாற்பட்ட விரதங்கொண் டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும் தவமேற் கொண் டொழுகாநின்ற வானப்பிரஸ்தர் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத் கலின், அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நி ன் ற தொரு துணை யென்று கூறியவாருயிற்று. துணையென்றது இடையூறு

ராம லுய்த்து விடுவாரை. 1.

2. துறந்தார்க்குந் துவ்வா தவச்க்கு மீறந்தார்க்கு

மில்வாழ்வா னென்பான் றுண.

(இ.ன்) வருணத்தினையும் ஆச்சிரமத்தினையுத் துறந்தார்க் ஆம், துறவாது நல்குரவாளரா புண்ணப் பெருதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணையாவான். (எ-று).

மேற்கூறிய மூவரும் வருமூச்சிரமங்களைத் துறவாமையா லீண்டுத் துறந்தாரென்று கூறப்பட்டது. செத்தார்க் கிவன் செய்ய வேண்டுவது புறங்காட்டுய்த்தல் முதலாயின செய்ய வேண்டுதலின், இது, மேற்கூறியவரே யன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.2

43. தென்புலத்தார் தெய்வம் விருத்தொக்க ரூனென்குங்

கைபுலத்தா ருேம்ப றலே.

(இ-ன்) பிதுரர். தேவர், புதியராய் வந்தார். சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் .ெ க - ம லேரம்புதல் தலையான வில்வாழ்க்கை, (எ-று).