பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319

10. நல்குரவு

1045. நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள்

யாதொன்றுங் கண்பா டரிது.

(இ-ள்) நெருப்பினுள்ளே கிடந்து உறங்கலும் ஆ கு ம்; திரம்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு காலத் ம் அரிது (எ

H றங்குத தாரு DJ து று)

இஃது, உறங்கவொட்டா தென்றது. 6

104 7. இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்

கொன்றது போலு நிரப்பு.

(இ-ள்) இன்றும் வரும்போலும்; நெருநலும் என்னை க் கொன்றது போலும் நிரப்பிடும்பை, (எ-று).

இது. நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறியவாறு. 7

1048. இற்பிறந்தார் கண்ணே யு மின்மை யிளிவந்த

சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

இ-ள்) நல்குரவு, குடிப்பிறந்தார் மாட்டேயும் இளிவர வான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும். (எ-று).

இது குடிப்பழி உண்டாக்கும் என்றது. 8

1949. நல்குர வென்னு மிடும்பையும் பல குரைத்

துன்பங்கள் சென்று படும்.

(இ-ள்) நல்குரவாகிய துன்பத்தினுள்ளே பலதுன்பங்களும் சென்று தோற்றும் (எ-று).

குரை-அசை. மேற்கூறிய வேயன்றி எல்லாத் துன்பமும்

Ll ண்டாமென்றது. 9

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை

பரப்பிற்குங் காடி க்குங் கூற்று. (இ-ன் நுகரும்பொருள் இல்லாதார் அப்பொருளின் மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டி, (எ-று).