பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

3. காமத்துப்பால்

இதுதான் மூவகைப்படும். அருமையிற் கூடலும், பிரிந்து கூடலும், ஊடிக் கூடலும் என. அருமையிற் கூடுதல் ஆவது, கூடுதற்கு எளிது அன்மையால் ஒருவர் ஒருவரைக் கண்ட காலம் தொட்டும் ஒத்த நினைவினராய் நின்று கூடுதல். பிரிந்து கூடுதல் ஆவது இவ்வாறு கூடினார் பின்பு ஒரு காரணத்தால் பிரிந்து அதன் பின் கூடுதல். ஊடிக் கூடல் ஆவது, தலைமகன் மாட்டுத்தவறு கண்டு புலந்த தலைமகளைப்புலவி நீக்கிக் கூடுதல். இவை மூன்று கூட்டமும் இவற்றது நிமித்தமும் இக்காமத்துப் பாலும் கூறுதல் தமிழ் நடை யன்று; ஆதலின் இதற்கு இலக்கணம் யாங்ஙனம் பெறுது மெனின் இவ்விலக்கணம் தமிழ் நடையாயின் அகப் புறம் என்று கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறாது அறம் பொருள் இன்பம் என வட நூல்வழியே கூறினார். ஆதலின் இதற்கு இலக்கணம் வாற்சாணியம் என்னும் காமதந்திரத்துச் சுர தவிகற்பம் என்னும் அதிகாரத்துக் கண்டு கொள்க. அன்றியும், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை, தேருங்காலை திணைக்குரிப் பொருளே’ என்றா சாதலின், அவற்றுள் இருத்தலும் இரங்கலும் பிரிந்துழி நிகழுமன்றே; அவற்றைப் பிரிவினுள் அடக்கிப் புணர் தலும் பிரிதலும் ஊடலும் எனத் தமிழ் நடையிற் கூறினும் இழுக்காது இதனுள் தகையணங் குறுதல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தல் ஈறாக அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் மூன் றும். நலம் புனைந்துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விதும்பல் ஈறாகப் பிரிந்து கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் பதினெட் டும், நெஞ்சொடு புலத்தல் முதலாக ஊடலுவகை ஈறாக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் நான்கும் ஆக இருபத்தைந்ததிகாரமும் கூறப்பட்டது. அவற்றுள் முன்பு கண்ட றியா அ ரு ைம யி ற் கூடலைப்புணர்ச்சி மகிழ்தலென்றும், அதனையறிதலாற் பிரிந்து கூடலைப் புணர்ச்சி விதும்பல் என்றும், கலாந்தீர்ந்து கூடுதலால் ஊடிக்கூடலை ஊடலுவகை யென்றும்

கூறினார் என்று கொள்ளப்படும்.

  • தொல் அகம்-16.