பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

2. வாழ்க்கைத் துணை நலம்.

E.

53. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

நி ைமகாக்குங் காப்பே தலை.

(இ-ள்) மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல்யாதனைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல், (எ-று)

மேற்கூறிய ஒழுக்கம் சிறை செய்து காக்க உண்டாகாதோ’ என்றார்க்கு, அது செய்தாலும் நிறையிலராகில் அழியும், இரண்டும் வேண்டும் என்பது உங் கூறிற்று.

54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்

திண்மையுண் டாகப் பெறின் .

(இ-ள்) .ெ ப ண் பிறப்புப்போல மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின், (எ-று).

மேல் வேண்டும் என்ற நிறையுடைமை குல மகளிர்க்கு இயல்பன்றாே’ என்றார்க்கு, அ ஃ து எல்லார் மாட்டும் உளதாகா தென்று கூறப்பட்டது. 4.

55. புகழ் புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்

னேறுபேற் பீடு நடை.

(இ-ள்) புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லே யாம், தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை , (எ-று).

ஏற்றுநடை-அசைவும் தலையெடுப்பும் (பொருத்திய நடை.)

மனையாளொழுக்கக் குறைபாட்டால் அறத்திற்கு வ ரு ம் குற்றமென்னை யென்றார்க்கு, அதேைன தலையிறக்கம் வரும்; வந்தால் பின் இல்வாழ்க்கைத் தருமம் செல்லாது’ என்பது கூறுகின்றா ராதலின் பிற் கூறப்பட்டது.

56. இல்லதெ னில்லாைண் மாண் பானு லுன் எ துெ

னில்லவண் மாண க் கடை.