பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361

2. படர்மெலிந்திரங்கல்

இது, தலைகள் ஆற்றாமை கண்டு நெருங்கிய தோழியைக் குறித்து, நமக்குத் துணையாவார் இல்லை’ என்று தலைமகள் கூறியது. 4

115 5 இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்காற்

றுன்ப மதனிற் பெரிது.

(இ-ள்) காமப்புணர்வினால் நமக்கு வரும் இன்பம் கடல் போலப் பெரிது; பிரிவினான். அஃது அடர்க்குங்காலத்து வருந் துன்பம் அக்கடலினும் பெரிது, (எ று).

இஃது, இன்ப முற்றார் துன்ப முறுதல் உலகியல்” எ ன் று ஆற்றுவித்த தோழிக்கு ‘இன்பத் தளவாயின் ஆற்றலாகும்; துன்பம் மிகுதலான் யான் ஆற்றலரிது’ என்று தலைமகள் கூறியது. 5

1166 காமக் கடும்புன னிந்திக் கரை காணேன்

யாமத்தும் யானே யுளன் .

(இ-ஸ்) காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரைகாண் கின்றிலேன்; அரையிருள் யாமத்தும் உறங்காதேன் யானேயுளேன். மற்று உறங்காதாரில்லை, (எ-று) .

இது. காதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னை’ யென்று தலைமகள் தன்னுள்ளே கூறியது. 6

1167. மன்னுயி ரெல்லாந் துயிற்றி பளித் திரா

வென்னல்ல தில்லை துணை .

(இ~ள்) அளித்த இரா உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லா வற்றையும் துயிலப்பண்ணி, என்னையல்லது வேறு துணையாக இருந்தாரில்லை, (எ-று).

இது, கண் உறங்குகின்றதில்லை யென்று பிற்றை ஞான்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7

1. யுளன்’ என்பது மணக் பாட'