பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

3. புதல்வரைப் பெறுதல்

மேல் புதல்வரைக் கற்பிக்க வேண்டுமென்றார், அதற்ை பயனென்னயென்றார்க்கு, அ வ ர் நன்னெறியிைெழுகுதலானே தமக்கும் பிறர்க்கும் இனிமையுண்டாமென்று கூறப்பட்டது. R

69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச்

சான்றாே னெனக்கேட்ட தாய்.

(இ-ள்) தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும், தன் மகனைச் சான்றாேனெனப் பிறர் சொல்லக் கேட்டகாலத்துத்தாய், (எ-று). யாது மறியாத பெண்டிரும் மகிழ்வரென்று கூறிற்று 9.

70. மகன்றந்தைக் காற்று முதவி யிவன் தந்தை யென்னுேற்றான் கொல்லென்னுஞ் சொல்.

(இ-ள்) மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல், (எ-று). -

இது, நெறியினெழுகுவாரை உலகத்தார் புகழ்வராதலான், மகனும் ஒழுக்கமுடையகை வேண்டுமென்றது.

இவ்வதிகாரத்துப் புதல்வரைக் கற்பிக்க வேண்டும் என்றத னுைம் புதல்வன் உலகத்தார் புகழுமாறு ஒழுகவேண்டும் என்றத னுைம் நால் வகைப்பட்ட ஆச்சிரமத்தினும் இல்வாழ்வான் இலக்கணம் அன்புடைமை முதலாகக் கூறுகின்றாராதலானும் முற்படப் பிரமசரிய விலக்கணம் கூறியவாருயிற்று. 10

4. அன்புடைமை

அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவனதல். எல்லாக் குணங்களிற் சிறந்த தாகலின் முற்படக் கூறினர். அன்பு சிறந்த வாறென்னையெனின்? ஈண்டுக்

கால்லெனும்’ என்பது மணக் பாடம்.