பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

4. அன்புடைமை

கூறுகின்ற அறம் தானமாதலின், அஃதன்பிலார் மாட்டுச் சென்று எற்பாரின்றாம் என்பதல்ை அன்பு சிறந்ததென்க.

71 என்பி லதனை வெயில்போலக் காயுமே

யன்பீ லதனை யறம்.

(இ-ன்) என்பிலாத உயிரினவெயில் சுடுமாறு போலச்சுடும், அன்பிலாத வுயிரினை அறமும், (எ-று).

என்றது என் சொன்னவாருே வெனின், என் புள்ளதனுக்கு வெயில்குளிர் தீ ர் த் த ல் முதலான இன்பத்தைப் பயக்கும். அவ்வாறன்றி என்பில்லாததனுக்கு வெயில் இ ந் து ப ட் டெல்லையான துன்பத்தைப் பயக்குமாதலால் ஒரு தன்மையாக எறித்த வெயில் உடம்பு வேற்றுமையால் இன்பமும் துன்பமும் பயந்தவாறு போல் அறமாகிய கடவுளும் பிறர் மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அன்பிலாதார்க்குத் துன்பமும் பயக்கும் என்றவாருயிற்று. இதனுனே அன்பு வேண்டுமென்றாராம். 1.

12 அன்ாகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்

வற்றன் மரந்தளிர்த் தற்று.

(இ-ன்) தன்னிடத்து அன்பில்லாத அயிரினது வாழ்க்கை, லிைய பாரிடத்து உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற்போலும், (எ-து)

தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாருயிற்று இஃது அன்பிலாதார்க்கு ஆக்கமில்லை என்றது.

73. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை

யகத்துறுப் பன் பில் லவர்க்கு’.

(இ-ள்) உடம்பின் அகத்துறுப்பாகிய அன்பிலாதார்க்குப் புறத்துறப்புக்களெல்லாம் யாதனைச் செய்யும்? (எ-து). HT

so

4ன்பில்லவர்க்கு” என்பது மணக்குடவர் பாடல்.