பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403

14. புணர்ச்சிவிதும்பல்

இது மேற்கூறிய சொற்கேட்டு ஊடல் வேண்டுவோர் தலை :கற் கானா தொழிதலே உளது’ என்று நகையாடிய தோழிக்குத்

தலைமகள் கூறியது. 10.

பிரிந்து கூடல் முடிந்தக

15. நெஞ்சொடுபுலத்தல்.

நெஞ்சொடுபுலத்தலாவது தலைமகன் பரத்தையிற் பிரிந்துழி அவனோடு புலக்கக் கருதிய தலைமகள் முற்பட அவனொடு கூட வேண்டிய நெஞ்சொடு புலந்து கூறுதல். இனி ஊடிக்கூடல் கூறு கின்றாராகலின், அவ்வூடுதலின் முற்பட இது தோற்றுமாதலின், முற் கூறப்பட்டது.

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே

நீயெமக் காகா தது.

(இ-ள்) அவருடைய நெஞ்சு அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும், நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ? (எ-று).

இது, தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள் ளிய நெஞ்சொடு புலந்து கூறியது. l

1292, தஞ்சத் தமரல்ல ரே தி லார் தாமுடைய

நெஞ்சத் தமர ல் வழி.

(இ-ள்) தாமுடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங் காலத்து, ஏதிலார் சுற்றமல்லராகுதல் எளிது (எ-று).

“தலைமகன் யாண்டுளன்’ என்று குற்றேவல் மகளிசை அறிய விட, அவர், பரத்தையர் சேரியுளான் என்று கூறியவழி, அவர் வந்த காலத்தில் நெஞ்சு நம்வழி ஒழுகாது அவர்வழி ஒழுகினால்