பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 * ()

1 ? . புலவி நுணுக்கம்

செவ்வையிற் றே ன்றாமையின் துணுக்கமாயிற்று. புலவியினும் துண்ணிய புலவி என்று கூறினமையால் வேறுபடுத்து அதன்பின்

கூறப்பட்டது,

1311. பாரினுங் காதல மென்றே மா ஆடி னாள்

யாரினும் யாரினு மென்று.

(இ-ள்) ஒருவனும் ஒருத்தியுமாகி அன்று அன்பினால் புணர்ந் தான் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னோமாக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீராயினி ரென்று சொல்லி ஊடினாள்.

-gy)

காதலுடையேம் என்று உளப்பாட்டுத் தன்மையாகக் கூறிய வதனை உயர்ச்சியாகக் கூறினானாகக் கருதினாள். தலைமகன் வாயில் வேண்டின விடத்து, நின்குற்றத்தினாலே ஊடல் மிக்கிருந் தாள்’ என்று கூறிய தோழிக்கு, “அவள் ஊடுதற்கு யான்குற்றம் செய்ய வேண்டா; யான் சொல்லுவனவும் செய்வனவும் எல்லாம் குற்ற மாயிருக்கும்; அவள் குற்றமாகக் கொண்டவற்றைக்கேள்’ என்று சொல்லுவான், முற்பட “அன்புடையேன்” என்று சொல்லியது குற்றம் ஆயிற்றென்று கூறியது. 1

1312. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனரக்

கண்ணிறை நீர்கொண் டனள்.

(இ=ள்) இப்பிறப்பில் யாம் பிசியே மென்று சொன்னேன்; அதனானே மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள், (எ-று) .

இது பிரியேனெனினும் குற்றமா மென்று கூறியது. 2

1313. உள்ளினே னென்றீர்மற் றெம்மறந்தி ரென்றெம்மைப்

புல்லாள் புலத்தக் கள்ை.

(இ-ள்) நீர் துறந்தவிடத்து எம்மை நினைந்தேனென்றிர்; மறந்தாரன்றே நினைப்பார்; ஆதலான், எங்களை மறந்தீரென்று எம்மை முயங்காளாய்ப் புலவித் தகுதியளாயினாள். (எ-று).