பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

14 வெஃகாமை

(இ-ள்) பிறர்பொருளை விரும்பியாகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தின்ை ஆகும் பயன் நன்றாத லில்லையாதலான், (எ- று).

இஃது வெஃகாமை வேண்டுமென்றது. 1.

172. அஃகி யகன்ற வறிவென்னும் யார் மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

( இ-ள்) நுண்ணிதாய்ப் பரந்த அறிவுடைய யிைனும் அதனு ற் பயன் யாதாம்? பொருளை விரும்பி எல்லார் மாட்டும் ஈரமில்லாதன செய்வயிைன், (எ-று).

இஃது, அறிவுடையார் செய்யாரென்றது. 2.

173. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

(இ-ள்) வறியே மென்று பிறர்பொருளை விரும்புதலைச் செய் யார், ஐம்புலனையும் வென்ற புன்மையில்லாத தெளிவுடையார்,

இது, தெளிவுடையார் செய்யா ரென்றது. 3.

17.4. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

(இ-ள்) சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாத வற்றைச் செய்யார்கள், பேரின்பமாகிய வீடுபேற்றின்யத்தைக் காதலிப்பார், ! எ-று).

இது, வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது. 4.

175. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நானு பவர்.

(இ-ள்) தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடு படு

வன செய்யார்கள்; நடுவன்மைக்க காணுபவர். (எ-ாறு).

இது நடுவுநிலமை தமக்கு வேண்டுவார், செய்யாரென்றது.