பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

14. வெஃகாமை

(இ-ள்) அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், (எ-று). 10

அறனறிதல்-விரும்பாமை அறமென்றறிதல். இது, செல்வ முண் ாமென்றது.

15. புறங் கூறாமை

புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத்துரையாமை மேல் மானத்தினுல் தவிர வேண்டுவன சென்னர்; இனி மொழியினுற் செய்யலாகாதன கூறுகின்றாராகலின்; இது அதன்பின் கூறப்பட்டது. -

181. கண்ணின் று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னுேக்காச் சொல்.

(இ-ள்) ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்துச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணுத சொல்லைச் சொல்லா தொழிக, (எ-று)

இது, புறங் கூறுதல் தவிர்க வென்றது; இதஞனே கடுஞ் சொற் கூறலும் ஆகாதென்றது. 1

182. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத

லறங்கூறு மாக்கந் தரும்.

(இ-ள்) காணு விடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய் செய்து உயிரோடு வாழ்தலின், புறங்கூறாதிருந்து நல் குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந்தரும், .(I-5)