பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

17. தீவினேயச்சம்

இது, வறுமை திரத் தீமை செய்யினும் பின்பும் வறியனா மென்றது. T 5

206. திப்பால தான் பிறர்கட் செய்யற்க நோய்ப்பால

தன்னை யடல்வேண்டா தான்.

(இ-ள்) தன்னைத் துன்பப்பகுதியாயின நலியாமல் வேண் டுபவன், தீமையாயினவற்றைப் பிறர்க்குச் செய்யா தொழிக. (எ-று) .

இது, நோயுண்டாமென்றது. 6

207. தீயவை தீய பயத்தலாற் றியவை

தீயினும் மஞ்சப்படும்.

(இ-ள்) தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே. அத்தொழில் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் நீக்கத்தினும் சுடுதலின் அதனினும் மிக அஞ்சப்படும் (எ-று).

மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனை மனத்தினானும் நினைக்கலாகா தென்றது. 7

208. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செருக்கு

(இ-ள்) என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார், சீரிய ரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை, (எ-று) .

இஃது, இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

209. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யா னெனின்.

(இ~ள்) ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யா னாயின் தனக்குக் கேடு வருதலில்லையென்று தானே யறிக (எ-று).

இது, கேடில்லை யென்றது.