பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

28. ஈகை

(இ-ள்) பொருளற்றாரது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக; அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம், (எ-று).

இது, பகுத்துண்ணப் பொருளழியாது என்றது

230. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை

மாற்றுவா ராற்றலிற் பின்.

(இ~ள்) பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்; இதுவும் பெரிதாவது பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு, (எ-று) . -

இது, தவம் பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலி யுடைய ரென்றது. 10

20 புகழ்.

புகழாது புகழ்பட வாழ்தல் அஃதாவது யாதொன்றானும் தம் மாட்டு வருவார் வேண்டிவந்தால், அவர் வேண்டி வந்த பொருள். கொடுப்ப தொன்றனாயினும் அதனை மறாது கொடுத்தல், இது ஈதலுள் அடங்காதோ எனின் அது இல்லாதார்க்கு உணவு முதலா யின கொடுத்தல். இது கொடுத்தற்கரியன கொடுத்தல் இது தம் முள் வேற்றுமை, தருமபுத்திரனினும் கண்ணனைப் புகழப்படும் கவச குண்டலங் கொடுத்தலான். ஈதலும் புகழ்தலும் வேறாயதற்குச் செய்யுள்; நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார் இல்லா தார்க் கியாதொன்று மீகலார்-எல்லாம் இனியார்தோள் சேரா ரிசை படவாழார் முனியார் சொல் தாம்வாழு நாள். இது பற்றி யோராற் செய்யப்படுதலானும் இதனின் இல்லறத்திற்மிக்க சிறப்புடைய தின்மையானும் எல்லாவற்றினும் பிற்கூறப்பட்டது.