௧௦௨
முன்னுரை
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
......................................
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.'
(பரிசில் நீட்டித்த அதியமானை)
புறம்: 206 1 - 5; 12 - 13.
'சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடும் வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
(அதியமான் நெடுமானஞ்சியை)
- புறம்: 235; 1 - 6.
‘அரிக்குரல் தடாரி இரிய வொற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
புன்றலைப் பொருநன் அளியன் தானெனத்
தன்னுழைக் குறுகல் வேண்டி என்அரை
முதுநீர்ப் பாசி யன்ன உடைகளைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
.....................................
பகடுபெறு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை
மலையலர் அணியும் தலைநீர் நாடன்
(அதியமான் நெடுமானஞ்சியை)
- புறம் 390: 8 - 18; 22 - 24
'மதியேர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்றுயான்