௧௧௬
முன்னுரை
நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை நன்மையன்
.....................................
இலம்படு காலை யாயினும்
புலம்பல்போ யின்று பூத்தவென் கடும்பே'
--- புறம் 380. 10 - 11, 15 -16
இனி, செல்வக் கடுங்கோ வாழியாதனைக் 'குண்டுகட் பாலியாதன் பாடியது.
'பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி
மிகப்பொலி யர்தன் சேவடி யத்தை என்று
யான்இசைப்பின் நனிநன்றுஎனாப்
பலபிற வாழ்த்த இருந்தோர் என்கோ. . . . . . .
.................................
என்சிறுமையின் இழித்துநோக்கான்
தன்பெருமையின் தகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறையு நிரையென்கோ
மனைக்களமரொடு களமென்கோ
ஆங்கவை,
கனவென் மருள வல்லேன் நனவின்
நல்கி யோனே நசைசால் தோன்றல்'
--- புறம் 387, 12 - 16; 20 2.
இனி, சிறுகுடி கிழான் பண்ணணை, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது:
'தன்னிலை யறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக வுடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்ற
--- புறம்: 388, 5 - 7.
இனி, ஆதனுங்கனைக் 'கள்ளிலாத்திரையனார் பாடியது:
'ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும'
--- புறம்: 389; 13 - 1.
இனி, கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.