கஉஉ
முன்னுரை
10) காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். — 360.
11)வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல், — 363,
12) சென்ற இடத்தான் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. — 422.
13) வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. — 439.
14) மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். - 457.
15) வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். – 622.
உடைமை அளவாகக் கூறப்பெறும் அறக்கூறுகள் சில:
(இவற்றைப் பொருளவாகவும் செயலளவாகவும்கூடக் கொள்க)
1) அன்றறிவாம் என்னாது அறம் செய்க. - 36.
2) வீழ்நாள் படா.அமை நன்றாற்றல் - 38.
3) செயற்பாலது . . . . . அறனே. - 40.
4) அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை - 49.
5) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது -- 68.
6) உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா
மடமை மடவார்கண் உண்டு. — 89.
7) நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். - 123.
8) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். – 172.
9 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.