திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௪௫
அவன் வாயில் வைக்க வேண்டும்:
மனு: 8 - 271.
பிராமணர்களைப் போல் அடையாளங்கள் இட்டுக் கொள்பவனை, அரசன் உறுப்புகளை (அவயங்களை) வாங்க வேண்டும்.
மனு: 9 - 224.
தன் சாதித் தொழிலை விட்டு வேறு சாதித் தொழில் செய்பவனை அரசன் ஊரைவிட்டு ஒட்ட வேண்டியது.
மனு: 9 - 225.
'மதம் காரணமாகப் பிராமணனைத் துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு துன்புறுத்தின சூத்திரனைப் பயங்கரமாகச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டியது.
மனு: 9 - 248.
'பிராமணர்களைப் பகைத்துக் கொண்டால் நாடே அழியும்; அரசனும் அழிவான்'
மனு: 9 - 314, 315.
பிராமணன் அறிஞனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம்'
மனு: 9 - 317, 319.
'பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்கு மோட்சம்
மனு: 9 - 334.
'சூத்திரன், பிராமணன் இல்லாதபொழுது கடித்திரியனுக்கும், அவனில்லாவிடில் வைசியனுக்கும் பணிவிடை செய்க
மனு: 9 - 335.
தாழ்த்தப்பட்ட ஈன சாதிகள் பிணத்தின் துணிகளைத்தான் உடுக்க வேண்டும்; எச்சில் உணவைத்தான் சாப்பிட வேண்டும்
மனு: 10 - 35.
அவர்கள் (தாழ்த்தப்பட்ட ஈனசாதிகள்) ஊருக்கு வெளியில் தான் குடியிருக்க வேண்டும்'
மனு: 10 - 36.
தாழ்த்தப்பட்ட ஈனஜாதிகள், சண்டாளர்கள் ஆகியவர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்:
மனு: 8 - 271.