பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கச.அ

முன்னுரை 


-மனு: 10 - 61

இவ்விடத்தில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'
– 972.

- என்னும் திருக்குறளை ஒர்க,

'பிராமணன், பசு, பெண், குழந்தைகள் - இவர்களைக் காப்பதற்காக யார் உயிரை விடுகிறார்களோ, அவர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள்

- மனு: 10 - 62.

'பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாக மாட்டான். பிராமணன் சூத்திரத் தொழிலைச் செய்தாலும் சூத்திரனாகமாட்டான்'

- மனு: 10 - 73.

'சூத்திரன் பொருள் சம்பாதித்தால் அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றிச் சம்பாதிப்பவனுக்குச் சேரலாகாது '

- மனு: 9 - 416.

வைசியன் தன் தொழிலால் பிழைக்க இயலாதபொழுது சூத்திரனது தொழிலைச் செய்தே வாழவேண்டும்

- மனு: 10 - 98.

‘பிராமணன் துன்பப்படுகையில் இழிசாதியாரிடத்திலும் தானம் வாங்கலாம்'

'வறுமையில் பிராமணன் தகாதவர்களுக்கும் அறுதொழில் செய்து பிழைக்கலாம்'

'பிராமணன் உயிர்போகும் காலத்தில் எந்த இழிசாதியாரிடத்திலும் சோறு வாங்கி உண்ணலாம்; அது பாவமாகாது.'

பிராமணர்கள் அவ்வாறு செய்தமைக்கு எடுத்துக் காட்டுகள் உண்டு அஜீகர்த்தன் என்னும் முனிவன் 100 பசுக்களுக்குத் தன் மகனை விற்று வாழ்ந்தான்

'வாசுதேவன் என்னும் முனிவன் உயிர்போகும் காலத்தில் நாய்க்கறியை உண்டு பிழைத்தான்'

'பரத்துவாசன் என்னும் முனிவன் தச்சனிடம் பசுவைத் தானமாக வாங்கிப் பிழைத்தான்'

‘விசுவாமித்திரன் ஒரு சமயம் நாய்க்கறியை உண்டான்'

'பிராமணன் உயிர்வாழ வேண்டி நரக காரியங்களைக் கூட செய்யலாம்.'