பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

  கருஉ

முன்னுரை 


இஷ்டப்படி கொள்ளையிடலாம்:'

மனு: 9 248.

'தரும சிந்தனையுள்ள அரசன் இங்ங்ணம் திருடிக் கொள்ளையிட்டு யாகம் செய்கிற பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது'

மனு: 11 21.

'பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும், கொலை செய்தாலும் கொலைத்தண்டம் விதிக்கலாகாது. கொலைத் தண்டனைக்குப் பதில் அவன் தலையை மொட்டை அடித்தாலே போதுமானது.'

மனு: 7 26,

'அரசன் தண்டிக்காது விட்டால், தாழ்ந்த சாதியான் உயர்ந்து விடுவான்'

மனு: 7 21.

'பிராமணர்கள் சொல்லுகிறபடிதான் அரசன் நீதி செலுத்த வேண்டும்.'

மனு: 7 37, 38,

'பிராமணனை அரசன் நம்ப வேண்டும்'

மனு: 7 58, 59,

'அரசன் பிராமணர்களைத் தனக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்:'

மனு: 7 78, 79.
'அரசன் பிராமணர்களுக்கு நிறைய பொருள் தரவேண்டும்.'
மனு: 7 82 84

'அரசன் பிராமணனைப் பூஜிக்க வேண்டும்'

மனு: 7 88.

'பிராமணன் புதையல் எடுத்தால் அவனுக்கே கொடுத் விடவேண்டும்' இ!

மனு: 8 37, 39,

'அரசன் புதையல் கண்டால் பாதியைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.'

மனு: 8 38.

'அரசன் சாதி தர்மத்தைக் கொண்டே நீதி வழங்க வேண்டும்'

மனு: 8 41, 46