பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௬௦

முன்னுரை 


'அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு'

- புறம்: 56; 22 - 25.

'தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினும் கிளையரா வெறியும்
அடுநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமான் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை
நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்'

- புறம்: 58; 49; 24 - 25.

'ஞாயிறு அனையை நின்பகை வர்க்குத்
திங்கள் அனையை எம்ம னோர்க்கே'

-புறம்: 59, 6 - 7.

'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே'

- புறம் 134 1 - 4.

'வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய்கூறுவல்
ஓடாப் பூட்கை உரவோர் மருக’

- புறம்: 139, 5 - 7.

'பீடில். மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றுஎம் சிறுசெந் நாவே'

- புறம்: 148, 5 - 7.

'புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்'