பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௬௯



ஆரியவியலில். இவ் வேறுபாடான நடைமுறைகள் திருக்குறளில் தவிர்க்கப் பெற்று, குடிமக்களிடம் அரசன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லப் பெறுகிறது. பின் வரும் சில குறட்பாக்களைக் கவனமுடன் சிந்தியுங்கள்.

'குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழிஇ நிற்கும் உலகு' -   

-544.

'இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்' - -547.

'வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு' - -552.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை' - — -5:55.

இனி, இன்னும் சில பொதுநிலைகளைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.

'பிராமணனைத் துன்புறுத்துகிற அரசனைப் பிராமணன் அழிக்க வேண்டும்' மனு: 9 320.

'பிராமணனே அழிந்துபோக விருந்த அரச குலத்தை அக்குலப் பெண்ணைச் சேர்ந்து விருத்தி செய்தான்; எனவே, அரசன் அவனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது? மனு: 9 321, 322

'அரசன் தன் மூப்புக்காலத்தில் தன் சொத்துகளைப் பிராமணனுக்கும், நாட்டைத் தன் பிள்ளைகளுக்கும் தரவேண்டியது' மனு: 9 323.

'பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயனம் முதலிய செய்து கொள்ளாமையாலுமே கூடித்திரியர்கள் சூத்திரர்களாகிறார்கள் மனு: 10 43.

'கடித்திரியன் எக்காலத்திலும் பிராமணன் வேலையை மேற்கொள்ளக் கூடாது' மனு: 10 95.

'தாழ்ந்த சாதியான் பொருளாசையால் தனக்குமேலான சாதித் தர்மங்களைச் செய்தால், அவன் பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை உடனே ஊரைவிட்டு ஒட்ட வேண்டும்'