பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௭௫


‘பெண்கள் கர்மம் இல்லாதவர்கள் மந்திரம் அவர்களுக்குக் கிடையாது; அவர்களுக்குத் தூய்மையான மனம் இல்லை. அவர்கள் விபசார குணம் படைத்தவர்கள்.’

‘ஒருவன் தாய் ஏற்கனவே கெட்டவளென்று கருதிக்கொண்டு, அவளுக்காக விபசார தோஷம் செய்ய வேண்டுமென்று வேதங்கள் கூறுகின்றன.’

‘பெண்கள் கடலில் சேர்ந்த நதியைப் போல் தம் கணவர்களின் குணங்களையே அடைதல் வேண்டும்.’

‘பெண்கள் குழந்தைகளைப் பெறுவதால், அவர்களை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தல் வேண்டும்.’

‘பிள்ளை பெறுவதும் பெற்ற பிள்ளைகளைக் காப்பதும், விருந்து பேணுவதும் பெண்கள் கடமை.’

‘கணவன் சொல் கடவாமல் நடப்பவளே தன் கணவனுடன் சுவர்க்கம் எய்துவாள்; அல்லாதவள் நரியாய்ப் பிறப்பாள்.’

'கணவனைப் பகைத்து மனைவி விலகியிருந்தால், ஒராண்டு பொறுத்து அவளுக்குக் கொடுத்திருந்த ஆடை, அணிமணி இவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்க. அவளிடம் மீண்டும் பேச்சும் உறவும் கொள்ள வேண்டாம்: பொல்லாங்கு சொல்பவளை உடனே நீக்குக. மலடியை எட்டாண்டுகள் கழித்தும், அடிக்கடி பிள்ளை பிறப்பிக்கிறவளைப் பத்தாண்டுகளுக்குப் பிறகும், பெண் குழந்தைகளை மட்டுமே பெறுகின்றவளைப் பதினோர் ஆண்டுகள் கழித்தும் விலக்குக. வேறு மணம் புரிந்துகொள்க. அன்னவர்களுக்குப் பொருள் ஏதும் தர வேண்டியதில்லை.’

'குடிகாரி, கெட்டவள், கணவனுக்குத் துரோகம் செய்பவள், கொடுமையான மனம் உடையவள், ஊதாரி, தீராத நோயாளி - போன்றவர்களுக்கு ஜீவனாம்சம் கொடுத்து விலக்குக. வேறு மணம் புரிந்து கொள்க.’

'சந்ததியற்றுக் குலமே சர்வ நாசமுறும் போது, ஒரு பெண் தன் மைத்துனன், அல்லது ஏழு தலைமுறைக்கு உட்பட்ட கணவனின் பங்காளி ஆகியோரைக் கூடி, தன் கணவன், மாமனார் ஆகியோரின் அனுமதியுடன், வம்ச விருத்திக்குப் பிள்ளை பெறலாம்.’

‘பெரியோர்கள் அனுமதியுடன் விதவையைக் கூடலாம். அவன் அப்பொழுது உடலெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு, இருட்டான இடத்தில் கூடுக. ஒரு பிள்ளையை மட்டும் உண்டு பண்ணுக, அதற்கு மேலே உண்டாக்கக் கூடாது.’

‘ஒரே பிள்ளை இருப்பது சந்ததியில்லாமல் இருப்பது போல, எனவே