பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ககூஅ

 முன்னுரை


விட்டது. இன்றும்கூட காலில் விழுந்து வணங்கும் வழக்கம் பரவலாகவே பலரிடம் காணப்பெறுகின்றது.

இவ்வாறு தொழுவது ஓர் அன்பின் அடிப்படையில் தோன்றி இறுதியில் நம்பிக்கை நிலையில் நிகழ்கிறது என்பதை உணர்தல் வேண்டும். இந்த வகையான பலவகைத் தொழுகைகள் கழக இலக்கியங்களில் நிரம்ப உண்டு அவற்றுள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுவோம். பல்வேறு தொழு தல்களைக் காணலாம்.

நல்லோர் ஆங்கண் பரந்து தொழுது.ஐங்

390:1

தொழுது காண் பிறை'

குறுந் :1785

'வழுதி வாழி பல எனத் தொழுது' நற் :150:4 '

பெருங்கடற் சேர்ப்பன் தொழுது' நற் :245:12

பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின் நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த பதிற் :89:10

ஆழி முதல்வநிற் பேணுதும் தொழுது பரி :2:19

நின்ஆர்வலர் தொழுது ஏத்தி பரி : 4:2

பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுது பரி 15:66

உடங்கமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே பரி ; 19:105

வென்றிக் கொடி அணி செல்வ நிற்றொழுது பரி : 21:17

ஒன்றார்த் தேய்த்த செல் நிற்றொழுது பரி :21:70

வடமீன் போல் தொழுது ஏத்த கலி : 221

'புள்ளுத் தொழுது உறைவி. அகம் :351:17

இவ்வகையில், அக்காலத்துப் பெண்டிர் சிலர், அன்பின் மிகுதியால், அல்லது நம்பிக்கையினால், அல்லது பத்திமையால் தங்கள் கணவரைத் தொழுதிருக்கலாம். இன்றைய நிலையிலும் பெண்டிர் கணவரைத் தொழு தலும் வணங்குதலும் உண்டு. இது பிழையன்று. குற்றமும் அன்று. மூட நம்பிக்கையும் அன்று. கழகக் காலத்தில் மனைவி கொழுநனை வணங்கியது போலவே கணவனும் மனைவியை வணங்கிய குறிப்பும் காணப்படுகிறது.

நீயும் தொழுதகை மெய்யை' அகம் : 310:8

என்று தலைவன் ஒருவன் தலைவியை வணங்குகிறான்.இராமாயணத்தில், தசரதன், கைகேயியைக் காலில் விழுந்து வணங்குவதாகக் கம்பர் பாடியுள்