பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௦

முன்னுரை 


காட்டியுள்ளமையிற் காணலாகும். முறைவைப்புக்கு இயைபு காட்டுத்திறத்திலுங்கூட, ஒருவகைச் சமர்த்தையே திறம்பெறக் காட்டிநின்ற அழகும் உரைக்கோப்பிடையில் தெரிகின்றது!

அவர்க்கும் முன்னீடாகவிருந்து இன்று நமக்குக் கிடைக்கும் நான்கு உரைகளையும் அவருரையையும் ஒப்பவைத்துப் பொதுப்பட நோக்குமிடத்து - நமக்குப் புலனாகும் முதல் உண்மை, “பரிமேலழகர் உரை” முன்னைய யாவற்றையும்விடப் பருமையுடையது, என்பதே! தொடக்கத் தோற்றுவாயாகச் சிறப்புரை கூறல் - அதிகாரத் தோற்றுவாய் செய்து அதற்குரிய இயைபு சுட்டல் - பொருள் விளக்கம் நிறைத்தற்கென அவாய்நிலை வருவித்து நிறுத்தல் - கூர்த்த இலக்கணச் செய்திகளின் அடிப்படையில் பிறர் உரைகளை மறுத்துத் தனாஅது நிறுத்தல் - உரிய இடங்களுக்கேற்ப உவமைகளாகப் பல கூறி அவற்றைப் பலபடிகளாக விளக்கிச்செல்லல் ஆகியன இவருரையிற் காணப்பெறும் பெருஞ்சிறப்புக் கூறுகள்! அக்காலப் புலவர்களே மலைக்கவும் வியக்கவுமாக அவருரை அன்றைய நிலையில் அமைவிலங்கியது! இவையனைத்துக்கும் மேலாக, அவர் ஒரு பார்ப்பனர்! . . . . (பார்ப்பானுக்கு நம்மவர் நடுவில் எப்போதும் ஒரு தனிஇமதிப்பு. . .) (ஆரியப் பார்ப்பனர் மனம் நோகும்படியான எச்செயலையும் அரசரே செய்ய முடியாது செய்யக்கூடாது என்னும்படியான ஒரு தனி மதிப்பு நிலை - ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பாடேயே, இம் மண்ணில் மன்னியிருந்தது! (ஒ.நோ: புறம்: 43:13-14). அத்தொடு மட்டுமன்று; பார்ப்பனர்க்குப் பணிந்தவாறுதான் மன்னனே நடந்துவந்தான். (ஒ.நோ: பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே! (பதிற்றுப்பத்து:63:1)

( உமாபதி சிவாசாரியார் என்னும் பெயரிய புலவர்ஒருவர் (கி. பி. 1313) தமிழிற் சிறப்புற வெளிப் போந்துள்ளனவாகப் பட்டியலிட்ட ஆறுநூல்களுள் இரண்டிவையென்றவாறு திருக்குறளையும் அதற்கெனப் பரிமேலழகர் செய்த உரையையும் இணைத்தகுதி பெறுமளவிற் குறித்தெழுதிய பழைய வெண்பா ஒன்று, அக் காலப் புலவர்பெருமக்களிடையே ஒரு திருதிரு மருட்சியையும் ஒரு தனீஇ மதிப்பச்சத்தையும் ஏற்படுத்தியதோடு, அவருரை பற்றி அளவற்ற மீமதிப்பீட்டுக்குமான உரத்தையுந் தந்து நின்றதாயிற்று என்னும் உண்மையும் - இவ்விடத்திற் கருதத்தக்கதாகும்! அவர் ஒர் ஓக முனிவரென்றும் அவ்வோகத்தில் ஊழ்க வயத்தாழ்ந்து ஒவ்வொன்றாக உன்னியுன்னிக் கண்டறிந்த ஒப்புயர்வற்ற கருத்து மணிகள் - இவையென்னுமாறுபோலப் பல்வேறு கட்டுக் கற்பனைக் கதைகளும் அக்கால மேம்போக்குக் கல்விமான்களிடம் பரிமாற்றங்