பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௪௩


நீக்கித் தொகும்படி (685), இடனறிந்து எண்ணி (687), வாய்மையின் வழியில் (688),"வாய் சோராமல் (689), உறுதி பயக்கும் வகையில் (690),"வெறுப்பில வேண்டு வேட்ப (696), அவையறிந்து ஆராய்ந்து சொல்லின் தொகையறிந்து (711), நன்கு உணர்ந்து, சொல்லின் நடை தெரிந்து (712), சொல்லின் வகையறிந்து (713) சொல்லின் தொகையறிந்து 721) ஏற்று உணர்வார் முன்னர் இழுக்குத் தோன்றாத வாறு (716), கற்றறிந்து, கசடறச் சொல் தெரிந்து (717), உணர்வது உடையார் முன், வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிதல் (7.18) போல், கேட்பவர்க்கு நன்கு செல்லும்படி (686,719,722,728, 730) சொல்லுதல் வேண்டும் என்பது அவர் விரித்துக் கூறும் சொல்லுதல் இலக்கணம் என்க. இவ்விலக்கணத்துக்கு இலக்கியமாய் அவர் இந்நூலை எழுதியும் காட்டியுள்ளார் - என்று உணர்க.

இனி, அவர் இவ்வகையில் கையாண்ட இலக்கியச் சிறப்பு வாய்ந்த குறட்பாக்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுவாம்

1.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா(து) ஆகி விடின்

-17

2.புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை

-59

3.முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானம்

இன்சொல் இனிதே அறம்

-93

4.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு

-73

5.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

-385

6. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக்கு உறின்

-599

7.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை

முன்நின்று கல்நின் றவர்

.771

8.யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்.

.1094

9.துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

.1218

10. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண்டு அவள்செய் தது

.1279

11. மலரினும் மெல்லிது காமம் சிலரதன்