பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உ௩ 


திருவள்ளுவத்தினுள், அத்தகு உரையாசிரியர் தம் தனிச் சாற்றைத் தாமே பெய்துவைத்து நிற்பதையே அறிகிலார்! நல்லுணர்விலும் அறிவவாவிலும் - வள்ளுவரின் வாய்மொழி மேல் தாம் வைத்த நயப்பற்றிலுமாக அவருரைகள் அவருமறியாவாறே நடைபயில்வனவாயினும் - நள்ளுணர்வொடும் நயனுணர்வொடும் அவற்றை நண்ணும் நன்னெஞ்சினார், அந் நடைகளிடையிலுள்ள பிசுபிசுத்த நெகிழ்வு அடைவுகளையெல்லாம் அசைவற்று நின்று அளவிட்டோர்ந்து கொண்டே அவற்றின் மெய்யியல்புகளறிந்தவாறே மேற்செல்லுவர்! இது இயற்கையே! பல்கிக் கிடக்கும் அனைத்துரைகளிலும் மயங்கிய நிலையொன்று மல்கிக் கிடக்கும் உண்மையை அது தெள்ளிதாகத் தெரிவுறுதலை ஓர்ந்துபார்ப்பவர் உணர்வர்!

இம் மயக்கநிலை அகற்றும் மாமருந்து எது? அதுவே, மயக்கமற்ற ஒரு வள்ளுரையாகும்! வள்ளுவவுள்ளத்தோடேயே வாழ்விலும் வதியும் தெள்ளியர் ஒருவரால்தாம், - அவரன்ன மதிமை சான்ற சான்றோர் ஒருவரால்தாம், - அவரன்ன பட்டறிவார்ந்த ஒருவரால்தாம் - அத்தகு வள்ளுரையை வரைவாகவும் வார்க்கவல்லும்! வடித்தெடுக்கவும் ஒல்லும் ! அவையல்லவை யாவும் வெள்ளுரைகளாகவே உள்ளுறுத்திநின்று அல்லவையே தந்து அலைவுறுத்தங்களும் ஆற்றும்!

நுண்ணிய நூல்கள்பல கற்ற அறிஞராயிருந்துவிட்டால் மட்டும் - இத் திருக்குறளுக்கு உரிய உரையொன்றை உருவாக்கிவிட முடியுமா? முடியவே முடியாது!.. . . இதற்கென்று இன்றியமையாது அமைந்திருக்கவேண்டிய தகுதிப்பாடுகள் சிலவும் - இவ்வுரையாண்மையாளர்க்கு வேண்டுவனவாகின்றன! அவை, இவை: 1. உண்மை காண்பு வேணவா 2 மக்கட்பற்று 3. பொதுத் தொண்டீடுபாடு 4. தொடர்ந்த கல்வியீடுபாடு 5. நல்லொழுக்கம் 6. அறிவவா 7. மெய்யறிவுநோக்கு 8. ஏரணநோக்கு 9, அஃகியகன்ற பல்துறையறிவுத்தெளிவு (அவற்றுள் வரலாற்றறிவும் - மொழியியலறிவும் தொடக்கத் தலைமையன! . ) 10. துறவுள்ளம் பற்றிய இல்லற நல்லொழுக்கத் தோய்வு.

இவையாவும் ஒருசேரக் கொண்ட ஏந்தல் ஒருவர்க்கே உரைகூற ஒல்லும் படியாக, அதன் கட்டமைப்பானது கடுகிய அகக்கட்டுமானத்தைக் கொண்டதாயுள்ளது! அந்நூல் தோற்றப் பெற்றதனின்று அதனுள் பரவலாக் ஒளிறும் பொதுவான அறக்