பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௫௦

முன்னுரை


1876இலும்

அறிஞர் தே. பாரிக்யு (De Barrigue) அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 1889 இலும்

அறிஞர் ஞானா தியாகூ (Gnana Diagoo) அவர்கள் மொழிபெயர்ப்பு 1942இலும் வெளிவந்துள்ளனவாக அறியப் பெறுகிறது.

அடுத்து, அறிஞர் வியூரி இலாசோவ் அவர்களும், அறிஞர் ஏ. கிருட்டிணமூர்த்தி என்பாரும் சேர்ந்து செய்த உருசிய (Russian) மொழி பெயர்ப்பு 1963-இலும்

அறிஞர் அப்பா (தீட்சிதர்) அவர்கள் சமசுகிருத மொழிபெயர்ப்பு 1922இலும்

அறிஞர் சிரிராம (தீட்சிதர்) அவர்கள் அறத்துப்பால் சமசுக்கிருத மொழி பெயர்ப்பு 1961-இலும்

அறிஞர் செல்வி மிசிகாமி (Miss.Misigamy) எழுதிய சிங்கள மொழி பெயர்ப்பு 1961-இலும் வெளிவந்தனவாக அறியப்பெறுகிறது.

இனி இந்தி மொழிபெயர்ப்புகள்:

அறிஞர் கிசிமானந் இராகித் (Kshemanand Rahit) அவர்கள் மொழி பெயர்ப்பு 1924-இலும்

அறிஞர் பி.டி.செயின் அவர்கள் மொழிபெயர்ப்பு 1952இலும்

அறிஞர் எ.சு.சங்கர் ராசு அவர்கள் மொழிபெயர்ப்பு 1958-இலும், கிசிமானந் இராகித் அவர்கள் திறனாய்வு நூல் 1959-இலும்

அறிஞர் எம்.ஜி. வெங்கட்ட கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்ப்பு 1964-இலும் வெளிவந்தனவாகத் தெரியவருகின்றது. -

அடுத்து அறிஞர் பி.எசு. சானே (P.S. Sane) அவர்கள் மராத்தி மொழி பெயர்ப்பு 1931-இலும்

அறிஞர் நஜின்கிலால் சோக்சி (Najnklal Choksi) அவர்கள் குஜராத்தி மொழிபெயர்ப்பு 1932இலும்,

அறிஞர் நளினி மோகன் சன்யால் (Nalini.MohanSanyal) அவர்கள் வங்காள மொழிபெயர்ப்பு 1937-இலும்,

அறிஞர் ஹசரத் சுகர்வர்தி அவர்கள் உருது மொழிபெயர்ப்பு 1965 இலும்

அடுத்து மலையாள மொழிபெயர்ப்புகள்:

அறிஞர் கோவிந்தன் (பிள்ளை) அவர்கள் மொழிபெயர்ப்பு 1915-இலும்,