பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௦

முன்னுரை


றுகளை நூல் மரபு என்றே போற்றுவர். அவர் கூற்றுகளைக் காண்க

மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி னான

- தொல் 1590

செய்யுள் சொற்களால் ஆனது. சொற்கள் பொருள்களை உள்ளடக்கிய மரபுடையவை. இன்ன சொற்கள் இன்ன பொருள்களைக் கொண்டுள்ளன என்பது மரபு. அவ்வாறு மரபு நிலைச் சொற்கள், மரபு வழிப் பொருள்களைக் கொண்டிருப்பதாலும், அப் பொருள் சொற்களைக் கொண்டே செய்யுள் யாக்கப் பெறுவதாலும், மரபு நிலைகளைத் திரிக்கக் கூடாது என்பது மட்டுமன்று, அது திரியவும் கூடாது என்கிறார். அவ்வாறு காலப்போக்கில் தானே திரியினும், மீண்டும் மரபால் அதைத் திருத்தி அப்பழைய சொல்லையே வழக்கத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஏன்?

‘மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்’ - தொல் 1591

‘சொல்லுங் காலை அவையலது இலவே’ - தொல் 1525

‘குடை’ என்னும் சொல்லைக் ‘கொடை’ என்று கூறக்கூடாது. அவ்வாறு பேச்சு நிலையில் கல்லாதவர் கூறினாலும், அதை நூல் வழக்கில் அறிஞர்கள் குடை என்று திருத்தித்தான் எழுதல் வேண்டும். இவ்வாறின்றி ‘கொடை’ என்று எழுதினால், அது ‘கொடுத்தலைக்’ குறிக்கும். ‘கொடை’ என்றாகக் ‘குடை’ என்னும் சொல் அழிந்துவிடும். பிறகு ‘கொடை’ என்றால் அது பிடிக்கும் குடையாடி கொடுக்கும் கொடையா என்று குழப்பம் நேரிடும் என்கிறார். அதுதான் ‘மரபு நிலை திரியின் பிறிது’ பிறிதாகும், என்பது. ஒரு சொல்லால் ஒன்றைச் சுட்டிச் சொன்னால், அச்சொல் வேறு ஒன்றைச் சுட்டக் கூடாது என்பதுதான் மரபு. அதனால் தான் சொல்லுங் காலை அவையலது இலவே, என்று கூறினார் என்க. ‘விருந்தோம்பல்’ என்பதை ‘விருந்து’ என்று சுருக்கிப் ‘புதியவர்’ என்று பொருள் கொண்டால் ‘ஒம்புதல்’ என்னும் சிறப்புப் பொருள் தரும் மரபுச் சொல் தவிர்ந்துவிடும். பிறகு மொழி வளம் குன்றும். எனவே, ‘விருந்தோம்பல்’ என்றே எழுதிப் பொருளை வேண்டுமானால் வேறுபடியாக விளக்கி எழுதலாம் எனக் கொள்ளுதல் வேண்டும். அது பிழையாகாது. இதை ஆனந்தன்கள் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

‘புதுமை’ செய்வதாகக் கூறி, அரிசியையே சோறாக விளைய வைத்து விடக் கூடாது. பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக் கொள்பவர் சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஏன் அரிசியைக் கடவுள் (அது இருந்தால்) சோறாகவே விளைவிக்கக் கூடாது? என்று. ‘சோறாகவே விளைந்துவிட்டால்,