பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௭௩


5. ரெவரண்டு துரு ஜான் லாசரஸ், 6.ஐ.டி தங்கசாமி,

7. சி. ராசகோபாலாச்சாரியார், 8. டாக்டர் ஜி.யு. போப், 9.எல்.விஸ்.

பரிமேலழகர் காலம் கி.பி. 11 முதல் 14 ஆம் நூற்றாண்டுக் காலம். பிற உரையாசிரியர்களை மறுத்தலினால் அவர்கள் காலத்திற்குப் பிந்தியவர்.

6. இவற்றுள் ஐயப்பாட்டுக் குரியனவும் விளக்கம் வேண்டுவனவும் ஆகிய கருத்துகள் நிறைவுரை நூலுள் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப் பெறும்.

7. இவ்வுரைக் கருத்துகளை எவரும் புறக்கணித்துவிட முடியாது. புறந்தள்ளி விடவும் முடியாது. அந்த அளவில், திருக்குறள் தொடர் பாக அவ்வளவு பெரிய மாறுதல்களை புரட்சியை-கருத்தாலும், இயங்கியலாலும் ஒருவகை நடைமுறை மாற்றத்தை இவ்வுரை உருவாக்கும் என்பது திண்ணம்.

அறிவு நிலையிலேயே இஃதொரு புத்தொளி காட்டும் என்பதையும் எண்ணுக.

8. இவ்வுரையும் விளக்கங்களும் இதுவரை எவரும் கடைப்பிடியாத நிலையில் தூய தனிச் செந்தமிழில் இயல்வன.

9. அதிகாரப் பெயர்களை மாற்ற நினைத்து மாற்றாமற் போனதற்குக் காரணம்-

குறள் வைப்பு முறைகளை மாற நினைத்து, மாற்றாமற் போனதற்குக் காரணம் . . .

10. 'அறமுதல் உணர்தல்' அறமுதற் பொருள் என்று முதன் முதற் கருத்தாண்டவர், கையாண்டவர் - பரிமேல் அழகரே நீத்தார் பெருமை அதிகாரத்துள் துறவியல் பெருமை கூறும் முன்னுரையுள், அறமுதற் பொருளை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆதலின், இது வான் சிறப்பின் பின் வைக்கப் பெற்றது என்றார்.

11 'திருக்குறள் மூலம் இதுவாக இராது. அடையும் இதுவாக இராது. அதிகாரங்களும் அவரால் பகுக்கப் பெறவில்லை' குறள் வைப்பு முறைகளும் சரியில்லை.

"அவராகச் செய்திரார்" என்பன போலும், சிதைவு நிலைக் கருத்து களைச் சிலர் கூறித் திருக்குறளை மேலும் மேலும் ஆய்வுக்குட்படுத்திக் கொண்டிருப்பதில் இனிமேலும் பயனில்லை என்று நாம் உணர்ந்து கொள்